கர்நாடகா மாநிலத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை

கர்நாடகா மாநிலத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரம் மாவட்டம் சிக்கோலாவில் சில தினங்களாக லேசான மழை பெய்தது. இதனால் சிக்கோலா அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்தநிலையில் சிக்கோலாவில் திடீரென சூறை காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், ஆயிரக் கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இந்தநிலையில் தமிழக எல்லை பகுதியான தாளவாடியிலும் கனமழை பெய்தது. சேதமடைந்த வாழை மரங்களுக்கு கர்நாடகா அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அம்மாநில விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version