நீலகிரியில் பெய்த கனமழையால் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மியமான காட்சி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஐந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாறைகள் நடுவே வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவது கண்களுக்கு விருந்தளிப்பதாக உள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதில், மண் சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதம் அடைந்தன.

மூன்று நாள் பெய்த மழை தற்போது சற்று குறைந்த நிலையில் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கூடலூரில் உற்பத்தியாகும் ஐந்து ஆறுகளில் அதிக அளவிலான தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக, மாயாறு, கம்மாத்தி ஆறு, பாண்டியாறு, புன்னம்புழா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளநீர் கரைபுரள்கிறது.

இதில், ஓவேலி பகுதியில் ஒட கூடிய இரண்டு ஆறுகளின் வெள்ளநீர், மலைப்பகுதியின் பாறைகள் மற்றும் மரங்களுக்கு நடுவே ஆர்ப்பரித்து கரை புரண்டு செல்வது கண்களுக்கு விருந்தளிப்பதாக உள்ளது.

Exit mobile version