சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தாலுக்காவின் ஒரு சில பகுதிகளில் கடந்த ஒருவாரமாக மிதமான மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில், நேற்று மாலை 5 மணியளவில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. அரை மணி நேரம் நீடித்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த சாரல் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் இப்பகுதியில் விதைக்கப்பட்டுள்ள மக்காச்சோளம், வெங்காயம், பீட்ரூட் உள்ளிட்டவற்றின் விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post