நீலகிரியில் பெய்த கனமழையால் உருளை கிழங்கு விலை அதிகரிப்பு

நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக உருளை கிழங்கு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது

கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் உள்ள உருளை கிழங்கு மொத்த ஏல மையத்தில் உருளைகிழங்கு வரத்து குறைந்துள்ளது. இந்த நிலையில், நீலகிரி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து உருளை கிழங்கு எடுத்து வரப்பட்டு, அவைகள் தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நீலகிரியில் பெய்த கனமழையால், உருளைகிழங்கு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏல விற்பனை மையத்திற்கு உருளைக் கிழங்கு வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இதுவரை இல்லாத அளவிற்கு விலை வெகுவாக அதிகரித்து 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Exit mobile version