தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறினார்.
மேலும் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்