வெப்ப சலனம் காரணமாக நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக தமிழகம், மற்றும் புதுவையில் உள்ள கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் 17 சென்டி மீட்டர் மழை பாதிவாகியுள்ளது.

Exit mobile version