வெப்பச் சலனம் காரணமாக 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வரை கனமழை நீடிக்கும் என்றும், டிசம்பர் முதல்வாரத்தில் பருவமழை தீவிரமடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.