கடலோர மாவட்டங்களில் கனமழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் வருகிற 30, 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் கனமழையும் இன்று பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version