காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து 45 ஆயிரத்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேஆர்எஸ் அணையிலிருந்து 15 ஆயிரத்து 300 கனஅடி நீரும், கபினி அணையிலிருந்து 30ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116 புள்ளி 2 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 87 புள்ளி 578 டி.எம்.சியாக உள்ளது. இந்நிலையில் காவிரி நீர் திறப்பால் மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.