தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது வருவதால், செங்கோட்டை அருகே உள்ள புளியரை ஸ்ரீ மூலப்பேரி நீர்த்தேக்கம் தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதன் மூலம், புளியரை பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யவும், 500 ஏக்கர் பாசன வசதி பெற முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தமிழகத்தில் பல இடங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கி கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடையநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. வீரசிகாமணி, சேந்தமரம், அருணாசலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரத்தில் கனமழை பெய்தது. இதனால், பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். 

Exit mobile version