தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள வடக்கு ஆந்திரக் கடற்கரைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. காலை முதலே நல்ல வெயில் இருந்த நிலையில் திடீரெனக் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் சாலைகள் மழை நீர் பெருக்கெடுப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, தியாகராய நகர், நந்தனம் போன்ற பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.