தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள வடக்கு ஆந்திரக் கடற்கரைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version