தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரன், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று குறிப்பிட்டார். தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்திற்கு தற்போது வரை 8 விழுக்காடு குறைவாகவும், சென்னைக்கு 19 விழுக்காடு அதிகமாகவும் மழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் புவியரசன் குறிப்பிட்டார்.

Exit mobile version