வெப்பச் சலனம் காரணமாக உருவான மேலடுக்கு சுழற்சி வலுவடைந்துள்ளதை அடுத்து தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வட மாவட்டங்களான சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக மேலடுக்கு சுழற்சி வலுவடைந்துள்ளதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளாதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் ,சென்னையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.