தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருவதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது.

Exit mobile version