நீலகிரி மாவட்டம் குன்னூரில் 1 மணி நேரமாக கொட்டித் தீர்த்த கன மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான பர்லியார், காட்டேரி சேலாஸ், அரவங்காடு, பாய்ஸ் கம்பெனி, பிக்கட்டி போன்ற பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பொதுவாக தென் மேற்கு பருவ மழை அவ்வப்போது சாரல் மழையாக பெய்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தநிலையில் ஒரு மணி நேரமாக பெய்த கனமழையால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.