தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் உள் மாவட்டங்கள் பொறுத்த வரையில், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version