மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கனமழை தொடர்வதால் பெரும்பாலான முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று மிக பலத்த மழை பெய்யுமென இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி, மும்பை, தானே, ராய்காட் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சியான் கிங் சர்கிள் பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. மும்பை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாததால் ஐதராபாத்திற்கு அனுப்பப்பட்டன. கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் கடல் அலை 15 அடி உயரத்திற்கு எழுந்ததால் கடலோரம் வசிக்கும் மக்கள் அச்சமடைந்தனர்.
மும்பையில் தொடரும் கனமழை காரணமாக போவாய் ஏரி நிரம்பியதால் தண்ணீர் வேகமாக வெளியேறி வருகிறது. கிழக்கு மும்பை புறநகர் பகுதியில் அமைந்துள்ள போவாய் ஏரி, தொழிற்சாலைகளுக்கு நீராதாராமாக விளங்குகிறது. 545 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த ஏரி, கனமழையால் நிரம்பியதையடுத்து உபரி நீர் வேகமாக வெளியேறி வருகிறது. இதனால் அருகில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் நிற்பதால் பெரும் சிரமங்களுக்கு இடையே பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர். வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கமுடியாமல் அவதிக்குள்ளாகினர். பாட்னாவில் மழைத் தொடருமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள