புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தொடர்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
தேக்காட்டூர் கிராமத்தில் 7 கண்மாய்கள் மூலம் பாசன வசதி பெற்று, ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. பெரிய கண்மாய் பாசனத்தை நம்பி தற்போது சுமார் 500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக திருமயம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்ததோடு, நீரில் மூழ்கி நெல்மணிகளும் முளைத்துள்ளன. இதனால் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் விடியா திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.