அரசு விழாவில் “இன்பநிதி”.. இன்பநிதி-னு சொல்லாதீக “இந்தியன் மெஸ்ஸி-னு” சொல்லுங்க” கலாய்க்கும் நெட்டிசன்கள்!

முன்னரெல்லாம் மன்னராட்சியில் தந்தைக்குப் பிறகு தமையன் ஆட்சிப் பொறுப்பேற்பது என்பது வழக்காறு. இந்தியா சுதந்திரமடைந்து மன்னராட்சி ஒழிக்கப்பட்டப் பிறகும் அந்த வழக்காறு தொடர்வது தமிழ்நாட்டில் மட்டும்தான். அதிலும் குறிப்பாக விடியா திமுகவின் வாரிசு அரசியல் உலகறிந்த உண்மை. பேரறிஞர் அண்ணா எனும் மாபெரும் ஆளுமை மக்களுக்காக உருவாக்கிய கட்சியை தன் மக்களுக்காக தாரை வார்த்தார் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி. அதனை பின்பற்றியே தமிழ்நாட்டின் முதலமைச்சராக அரியணை ஏறியிருக்கும் ஸ்டாலினும் தன்னுடைய வாரிசுக்கே கட்சித் தலைமைப் பதவியைக் கொடுக்க இருக்கிறார். ஸ்டாலின், உதயநிதிக்குப் பிறகு கட்சித் தலைமை யாரிடம் செல்லும் என்று கேட்டால் 2கே கிட்ஸ்களே “இந்தியன் மெஸ்ஸி இன்பா ப்ரோ” என்று இன்பநிதியின் பெயரை உரக்கக் கத்துவார்கள்.

இதற்கு அச்சாணி போட்டது போல, ஹாக்கி ஆசிய கோப்பைக்காக அரங்கமானது புதிதாக செப்பனிடப்பட்டு திறக்கப்பட்ட விழாவில் இன்பநிதியும் கலந்துகொண்டுள்ளார். ஒரு அரசு விழாவில் முத    லமைச்சர் மற்றும் இதர அமைச்சர்கள் இருப்பது காலம் காலமாக இருப்பதுதான். தமிழ்நாடு அரசுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஆள் எப்படி அரசு விழாவில் கலந்துகொள்ள முடியும்? ஒருவேளை உதயநிதிக்கு பிறகு இன்பநிதிதான் கட்சியை எடுத்து நடத்த வேண்டும் என்பதால், இப்போது இருந்தே கோச்சிங் கொடுக்கிறார் ஸ்டாலின் தாத்தா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.  ஏற்கனவே அமைச்சர் துரைமுருகன் ஒரு பேட்டியில், நான் கருணாநிதியுடன் இருந்தேன், ஸ்டாலினுடன் இருக்கிறேன், உதயநிதியுடன் இருப்பேன், ஏன் இன்பநிதியுடனுமே இருப்பேன் என்று கூறியிருந்தார். ஆக மொத்தம் மூத்த அமைச்சர்களையே “இங்க வாரிசு அரசியல்தான் பிரதானம், அதுக்குத் தேவ நிதானம்”-னு சொல்ல வச்சிருக்கிறார் விடியா முதல்வர் ஸ்டாலின்.

Exit mobile version