தமிழக கடலோர பகுதிகளில் வரும் 30-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழக கடலோர பகுதிகளில் வரும் 30-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்று வலுப்பெற்று வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 29-ம் தேதி பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக அந்த மையம் அறிக்கையில் கூறியுள்ளது. இதன் காரணமாக வரும் 29-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் அறிக்கையில் கூறியுள்ளது. அத்துடன் கஜா புயலுக்கு பிறகு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version