கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழக எல்லையான பிலிக்குண்டுலுக்கு நீர் வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியிலிருந்து 7 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 700 கன அடியிலிருந்து 400 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version