மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை

திருச்சி மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்ட நிலையில், நேற்று மாலை பலத்த மழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. சாலையில் சென்றவர்களும், மாணவர்களும் மழையில் நனைந்தபடியே சென்றனர். கண்ணூத்து அணைக்கு வரக்கூடிய ஓடையில் வெள்ளப்பெருக்கும் எற்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைக் கண்ட அப்பகுதி மக்கள், ஓடையில் இறங்கி உற்சாக கூக்குரலிட்டு மகிழ்ந்தனர்.

Exit mobile version