சேலத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை

சேலத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

கடந்த சில தினங்களாக சேலம் மாவட்டத்தில் கத்திரி வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென்று பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் மின் கம்பங்களும், போக்குவரத்து சிக்னல் கம்பங்களும் விழுந்து சேதமடைந்தன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. தற்போது சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version