வட மாநிலங்களில் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் இடை விடாத கன மழை பெய்து வருகிறது. இதனால்  யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  நிலச்சரிவு மற்றும் சாலை துண்டிப்பால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version