நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். கடும் வெயில் காரணமாக அணைகள், குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு போனதோடு, விவசாய பயிர்களும் கருக தொடங்கின. மழை வந்தால் மட்டுமே வாழ்வாதாரத்தை காக்க முடியும் என்று இருந்த நிலையில், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் தொடர் கனமழை பெய்தது.
நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின்னர் பெய்த தொடர் மழையின் காரணமாக, அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது.