முல்லை பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணை பகுதிகளில் மழை இல்லாததால் ஒரு மாதத்திற்கும் மேலாக நீர் வரத்து இல்லாமல் இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் சரிந்தது. கூட்டு குடிநீர் திட்ட பயனாளிகளுக்கு குடிநீர் வழங்க முடியாத சூழலும் நிலவியது. இந்த நிலையில் இரு தினங்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 187 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 112.05 அடியாக உள்ளது.