கிருஷ்ணகிரியில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததில் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன.
கிருஷ்ணகிரியில் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்தது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் குழந்தைகள் முதியவர்கள் அவதியுற்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பலமாக வீசிய காற்றால் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் தொழில் மையம் நகர பூங்கா ஆகிய பகுதிகளில் உள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.