கர்நாடகாவில் பெய்து வரும் பலத்த மழையால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு இரண்டாவது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், மோரனப்பள்ளி, பாத்தகோட்டா, ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பாயும் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் தற்போது 42.20 அடிக்கு நீர் உள்ளது. கர்நாடகாவில் இருந்து நேற்று வினாடிக்கு 631 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் இன்று வினாடிக்கு 508 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, 508 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.