கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 2 நாட்களாக கனமழை

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம், தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகும் நந்திமலை உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் முழுக்கொள்ளளவான 44.28 அடியில் 39.36 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது.

அணையின் நீர் வரத்து வினாடிக்கு 400 கனஅடியாக அதிகரித்துள்ளது. வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 560 கனஅடி நீராக உள்ளது. அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுவட்டார பகுதியை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version