நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக பெய்த தொடர் கனமழையால் உப்பளங்கள் மழை நீரில் மூழ்கி உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் உப்பு உற்பத்தியை தொடங்க ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவாகும் என உற்பத்தியாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Discussion about this post