74 ஆம் ஆண்டு ஐநா சபை கூட்டம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி வரும் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அங்குள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பின்பு, மோடி டெக்ஸாஸ் என்ற மாகாணத்தின் அருகில் ஹூஸ்டன் நகரில் உள்ள நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார். அங்கு அமெரிக்க வாழ் இந்தியர்களால் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ‘ஹவ்டி மோடி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் இந்தியர்கள் நடத்தும் விழாவில், ஒரே மேடையில் மோடியும் அந்நாட்டு அதிபர் டிரம்பும் கலந்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்தநிலையில், தற்போது ஹூஸ்டன்நகரில் கன மழை பெய்து வருவதாகவும். டெக்ஸாஸ்மாகாணத்தின் பல நகரங்களிலும் கன மழை பெய்வதால் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால்,அங்குள்ள டெக்ஸாஸ்மாகாண ஆளுநர் அவசர நிலை அறிவித்துள்ளார். மேலும், இம்மாகாணத்தில் புயல் தாக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மோடி ஹூஸ்டன் நகரில் ஹவ்டி மோடி நிகழ்ச்சி நடைபெறும்மா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு 1500 தொண்டர்கள் பணியாற்ற தயார் படுத்த பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
Discussion about this post