விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோடைக்காலம் தொடங்கியதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெயில் நிலவி வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சேத்தூர், கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு கனமழை பெய்தது. ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.