கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்று அழுத்த சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி , திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வட தமிழகத்தில் லேசான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version