தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் பரவலான மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

குறிப்பாக வட மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும், காரைக்காலில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலையில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version