தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு பிறகு மழை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திரக் கடற்கரைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக சேலம் மாவட்டம் ஓமலூர், திண்டுக்ல் ஆகிய இடங்களில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேட்டூரில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.சென்னையையில் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.