வட மாநிலங்களில் வரும் கன மழை: நாட்டின் மிகப்பெரிய சர்தார் சரோவார் அணை நிரம்பியது

வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக குஜராத்தில் உள்ள நாட்டின் மிக பெரிய அணையான சர்தார் சரோவார் அணை முழு கொள்ளவை எட்டி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் ஆமதாபாத் அருகே பாயும் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய அணையான சர்தார் சரோவார் அணை, 2017 ம் ஆண்டிற்கு பிறகு முழு கொள்ளவை எட்டியுள்ளது. இந்த அணையின் மூலம் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 81 லட்சம் ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு விநாடிக்கு 6 புள்ளி 47 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவான 453 அடியை எட்டி இருப்பதால் பாதுகாப்பு கருதி 23 மதகுகள் வழியாக விநாடிக்கு 6 புள்ளி 16 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Exit mobile version