நேபாளத்தில் கனமழையால் 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சர்வதேச அமைப்புகளின் உதவியை அந்நாட்டு அரசு கோரியுள்ளது.
நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. வீடுகள் மற்றும் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்நாட்டில் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பல நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தோடு, ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 67 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெள்ளத்தில் சிக்கி தவித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், சர்வதேச அமைப்புகளின் உதவியை அந்நாட்டு அரசு கோரியுள்ளது.