குமாரபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் திடீரென மாலையில் இருந்து குளிமையான காற்று வீசிய நிலையில் கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் சாலையில் சென்ற வாகனங்களில்,பயணிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு வாகனத்தை இயக்கினர். மேலும் மழையின் காரணமாக குப்பாண்டம்பாளையம், தட்டாங்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் பாதித்தது.