தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை

தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

மதுரவாயல், வானகரம், போரூர், ஆலப்பாக்கம், காரம்பாக்கம், அய்யப்பன்தாங்கல், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

கனமழையால் போரூரில் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருகெடுத்து ஓடியது. கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், செய்யூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

இதே போல், விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. தொட்டபெட்டா, பிங்கர் போஸ்ட், லவ்டேல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒருமணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் குளர்ச்சியான சூழல் நிலவியது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் இருள் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி சென்றனர்.

Exit mobile version