சென்னையில் நள்ளிரவில் கனமழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிண்டி, வேளச்சேரி, வடபழனி, மேடவாக்கம், பள்ளிக்கரனை, தியாகராய நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோல், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. கனமழை காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், பகல் மற்றும் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேல் பெய்த கனமழையால், அந்த மாவட்டத்தின் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version