வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்!

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
 

Exit mobile version