தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளாது. சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தேனி,திண்டுக்கல், நீலகிரி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் ஜூன் 10 மற்றும் 11-ம் தேதிகளில் மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

Exit mobile version