மேற்கு வங்கத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், பல்வேறு நகரங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில், கனமழை பெய்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் கடந்த 16ம் தேதி முதல் கனமழை பெய்து வரும் நிலையில், கொல்கத்தா, தெற்கு பர்கானாஸ், ஹவுரா, ஹுக்ளி கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாபூர் உள்ளிட்ட மாவட்டங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில், தண்ணீர் சூழந்து காணப்படுகிறது.
தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால், குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
அசன்சோல் எனும் இடத்தில், வீடுகள், வணிக வளாகங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மிட்னாபூரில் ஆறுகளில் பாய்ந்தோடும் வெள்ளம், தற்காலிக மரப்பாலத்தை அடித்துச் சென்றது.