நீலகிரி, கோவைக்கு கனமழை வரப் போகுதாம்! மக்களே உசாரா இருங்க!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் புவியரசன்,

செவ்வாயன்று, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றார்.

மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

சென்னையில், ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும் என்றார்.

வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்யும் என்றும்,

வரும் 13 ஆம் தேதி அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

அந்தமான் மற்றும் வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version