வெப்பச்சலனம் காரணமாக 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் திசை வேகமாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வருகிற 8ஆம் தேதி வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.