மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்