திருப்பதியில் பிரமோற்சவத்திற்கு ரூ.7 கோடி செலவில் ஏற்பாடுகள் தீவிரம்

திருப்பதில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 7 கோடி ரூபாய் செலவில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 8ம் தேதி நிறைவுபெறுகிறது. இந்த நாட்களில் ஏழுமலையான், காலை, மாலை என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார். இதனையொட்டி, பிரமோற்சவத்தை சிறப்பாக நடத்த, 7 கோடியே 53 லட்ச ரூபாய் செலவில் அனைத்து ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில் குமார் கூறியுள்ளார். விழா நாட்களில் 40 டன் மலர்கள் பயன்படுத்தப்பட உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகைப் புரிவார்கள் என்பதால், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். திருப்பதி ஏழுமலையானின் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பல ஊர்களில் இருந்தும் சிறப்பு ரயில்கள், பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

Exit mobile version