தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கோடைக்காலம் தொடங்கியதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் தங்களை பாதுகாத்து கொள்ள மக்கள் பழக்கடைகளில் தஞ்சமடைகின்றனர். இந்தநிலையில், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தில் காற்றின் சுழற்சி இல்லாததால் பகல் நேர வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் வடமேற்கில் இருந்து வீசும் வெப்பக் காற்றால், தமிழக வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.