மூணாறில் வெண்கம்பலம் போர்த்தியது போல் காட்சியளிக்கும் உறைபனி

தென்னகத்து காஷ்மீர் என்றழைக்கப்படும் மூணாறில் நிலவி வரும் கடும் உறைப்பனியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துசெல்கின்றனர்.

மூணாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி நிலவிவருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை முதல் அதிகாலை வரை கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இந்த குளிரை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் மூணாறில் குவிந்த வண்ணம் உள்ளனர். மூணாறு மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளான கன்னிமலை, பெரியவாரை, லட்சுமி, சிட்டிவரை சைலென்ட்வாலி, மாட்டுப்பட்டி, குண்டளை சிவன்மலை போன்ற பகுதிகளில் குளிரின் அளவு மைனஸ் 4 டிகிரியாக பதிவாகியுள்ளது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் வெண்கம்பலம் விரித்தது போல் ஆங்காங்கே உறைபனி படர்ந்து காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டுரசித்து செல்கின்றனர்.

Exit mobile version